×

ஜப்பான், ஆப்கானிஸ்தானை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் நள்ளிரவில் நிலநடுக்கம்: அதிர்ச்சியில் மக்கள்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் நள்ளிரவில் ஏற்பட்ட நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவாகியிருந்தது. மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஜப்பானில் கடந்த 1ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக பதிவாகியிருந்தது. இது இஷிகாவா, நிகாட்டா, டயோமா, யமஹடா ஆகிய மாகாணங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து 150க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வும் ஏற்பட்டது. மேலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு நிலைமை சீரானதும் வாபஸ் பெறப்பட்டது.

நிலநடுக்கத்தால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். வீடுகள் உள்பட ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. சாலைகள், வீதிகள் இரண்டாக பிளந்தன. மின் கம்பங்கள் சரிந்தன. நிலநடுக்கத்தால் இறந்தவர்கள் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்தள்ளது. கடந்த சில நாட்களாக ரஷ்யா, மியான்மரில் நில அதிர்வுகள் இருந்து வருகின்றன. அந்த வகையில் ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் நள்ளிரவு 2 முறை நில அதிர்வுகள் உணரப்பட்டன. முதல் நில அதிர்வு நள்ளிரவு 12.28 மணிக்கு 80 கி.மீ ஆழத்தில் பைசாபாத்திலிருந்து கிழக்கு பகுதியில் 126 கி.மீ. தொலைவில் ஏற்பட்டது.

அடுத்த சில மணி நேரத்தில் மீண்டும் ஒரு நில அதிர்வு உணரப்பட்டது. இது 12.55 மணிக்கு 100 கி.மீ. ஆழத்தில் பைசாபாத்தின் தென் கிழக்கே 100 கி.மீ. தூரத்தில் ஏற்பட்டது. அரை மணி நேரத்தில் 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். முதல் நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகவும் 2வது நில அதிர்வு 4.8 ஆகவும் பதிவாகியிருந்தது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரிலும் நள்ளிரவு 12.38 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

The post ஜப்பான், ஆப்கானிஸ்தானை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் நள்ளிரவில் நிலநடுக்கம்: அதிர்ச்சியில் மக்கள் appeared first on Dinakaran.

Tags : Midnight earthquake ,Jammu and Kashmir ,Japan, Afghanistan ,SRINAGAR ,JAMMU ,KASHMIR ,Japan ,Ishikawa ,Nikata ,Earthquake ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீா் துலிப் மலர் கண்காட்சி புகைப்படங்களின் தொகுப்பு..!!