×

மிக்ஜாம் புயல் நிவாரணம் கோரி ரேஷன் கார்டு இல்லாமல் விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யும் பணி தொடக்கம்..!!

சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணத்துக்கு விண்ணப்பித்த ரேஷன் கார்டு இல்லாதவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். மிக்ஜாம் புயல் பதிப்பின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதுபோலவே ரேஷன் கடை மூலம் ரூ.6,000 நிவாரணமானது ரொக்கமாக விநியோகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் ரேஷன் அட்டை இல்லாதவர்களும் ரூ.6,000 நிவாரணத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதற்கான விண்ணப்பமும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் 5.5 பேர் நிவாரண தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர். அதன்படி சென்னையில் 4.90 லட்சம் பேர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 29,000 பேர், திருவள்ளூர் மாவட்டத்தில் 22,000 பேர், செங்கல்பட்டு மாவட்டத்தில் 14,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பம் அளித்தவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆய்வும் செய்யும் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து செயலியில் விண்ணப்பதாரர்களின் விவரங்களை சரிபார்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பின்னர் அவர்கள் வீட்டிற்கு முன்பு அவர்களது புகைப்படங்களை எடுத்து அந்த செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணியை விரைவில் முடிக்க தமிழக அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த பணி முடிவடைந்த பின் தகுதியானவர்களுக்கு ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்சம் பேர் ரூ.6,000 நிவாரணத்துக்கு விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post மிக்ஜாம் புயல் நிவாரணம் கோரி ரேஷன் கார்டு இல்லாமல் விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யும் பணி தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mijam ,Kanchipuram ,Thiruvallur ,Chengalpattu ,Kancheepuram ,Mi'jam ,Mikjam ,
× RELATED கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில்...