×

சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: பல்கலை. ஆசிரியர் சங்கம் கோரிக்கை

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகம் துணைவேந்தர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று பல்கலை. ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பல்கலை.யில் பணியாற்றிக் கொண்டே பூட்டர் என்ற கல்வி நிறுவனத்தை துணைவேந்தர் ஜெகநாதன், அவரது கூட்டாளிகள் தொடங்கியதாக புகார் அளிக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் கைது செய்யப்பட்ட துணைவேந்தர் ஜெகநாதன் தற்போது நிபந்தனை ஜாமினில் வெளியில் உள்ளார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு தொடர்பாக 5 பேரிடம் கருப்பூர் போலீஸ் விசாரணை நடத்தினர். 2 பேராசிரியர்கள், 2 உதவி பேராசிரியர்கள், தொகுப்பூதிய பணியாளர் என 5 பேரிடம் தனித்தனியாக போலீஸ் விசாரணை நடத்தினர். பேராசிரியர் ஜெயராமனிடம் 2 மணி நேரத்துக்கு மேலாக காவல் உதவி ஆணையர் துருவி துருவி விசாரணை நடத்தினர். இதையடுத்து பல்கலைக்கழக முறைகேடு தொடர்பாக மேலும் 8 பேருக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக பெரியார் பல்கலைக்கழகம் ஊழியர் சங்கத்தை சேர்ந்த சத்தியவேல் பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது; துணைவேந்தர் ஜெகநாதனை சந்தித்து புகார்தாரர் இளங்கோவன் உரையாடிய சிசிடிவி காட்சிகள் அண்ணாமலைக்கு கிடைத்தது எப்படி? என்றும், பல்கலைக்கழகத்திற்குள் நடந்த நிகழ்வு குறித்து சிசிடிவி காட்சி பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கொடுத்தது யார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது அண்ணாமலைக்கு சிசிடிவி காட்சிகள் எப்படி கிடைத்தது என்பது பற்றி விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர். பல்கலை. வளாகத்தின் உள்ளே முகாம் அலுவலகத்தில் துணைவேந்தர் குடியிருந்தால் சாட்சிகளை கலைக்க நேரிடும் என்று அவர் கூறியுள்ளார். மேலும், துணைவேந்தர் ஜெகநாதனை சஸ்பெண்ட் செய்து பல்கலை. வளாக அலுவலகத்தில் இருந்து வெளியேற்ற தமிழ்நாடு அரசுக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் பிரேம்குமார் வலியுறுத்தியுள்ளார்.

 

The post சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: பல்கலை. ஆசிரியர் சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Salem Periyar University ,Vice ,Jaganathan ,Salem ,Vice-Chancellor ,Booter ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலைக்கழக...