×

கொடைக்கானலில் விதி மீறி வீடு கட்டிவரும் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு

மதுரை: கொடைக்கானலில் விதி மீறி வீடு கட்டிவரும் நடிகர்கள் பாபி சிம்ஹா மற்றும் பிரகாஷ்ராஜ் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கு குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஜூனைத் தாக்கல் செய்த பொதுநல மனு மீது ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. “கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா சொந்தமாக பங்களா கட்டி உள்ளனர். பங்களாவுக்கு கொடைக்கானல் நகராட்சியிடம் அனுமதி பெறாமல், விதிகளை பின்பற்றாமல் கட்டிடம் எழுப்பியுள்ளனர். விதிகளை பின்பற்றாமல் கட்டிடம் கட்டுவதால் கொடைக்கானலில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது” என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கொடைக்கானலில் விதி மீறி வீடு கட்டிவரும் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு appeared first on Dinakaran.

Tags : Prakashraj ,Bobby Simha ,Kodaikanal ,Madurai ,Court ,Madurai High Court ,Dindigul ,
× RELATED இந்தியன் 2 – திரை விமர்சனம்