×

எரிபொருள் கட்டணத்தை, ரத்து செய்வதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவிப்பு!

சென்னை: கடந்தாண்டு அக்டோபரில் கொண்டு வந்த எரிபொருள் கட்டணத்தை, ரத்து செய்வதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் டிக்கெட் கட்டணத்தில் ரூ.300 முதல் ரூ.1000 வரை குறையலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மற்றும் உள்நாட்டு சேவைகளில் இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post எரிபொருள் கட்டணத்தை, ரத்து செய்வதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Indigo ,Chennai ,Indigo airline ,Dinakaran ,
× RELATED மீனம்பாக்கம் விமான நிலையத்தில்...