×

குறைந்த நேரத்தில் அதிக வேகம் எடுக்கும் தொழில்நுட்பம்!: பயணிகளிடம் வரவேற்பை பெறும் அம்ரித் பாரத் ரயில் சேவை..!!

பெங்களூரு: இந்தியாவில் சாதாரண வந்தே பாரத் என அழைக்கப்படும் ஏசி வசதி இல்லாத அம்ரித் பாரத் விரைவு ரயிலின் சேவை பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அம்ரித் பாரத் விரைவு ரயில் குளிர்சாதன பெட்டி இல்லாத சாதாரண வகை ரயில்களாக இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் படுக்கை வசதியுடன் கூடிய 12 இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 8 பொது பெட்டிகள், 2 கார்டு பெட்டிகள் என மொத்தம் 22 பெட்டிகள் உள்ளன. பயணிகள் பாதுகாப்புக்கு ஒவ்வொரு பெட்டியிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நவீன வசதிகளுடன் அனைத்து தரப்பு மக்களும் பயணிக்கும் வகையில் குறைவான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2 அம்ரித் பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தொடங்கி வைத்த நிலையில், இதில் மால்டா முதல் பெங்களூரு வரை இயக்கப்படும் ரயில், தமிழகத்தின் காட்பாடி, ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. ரயிலின் முன்னும் பின்னும் எஞ்சின்களை கொண்டு புதிய புஷ் புல் தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பின்புறம் உள்ள எஞ்சின் ரயிலை முன்னோக்கி தள்ளும் என்பதால் குறைந்த நேரத்தில் ரயில் வேகம் எடுக்கும் என்பது சிறப்பம்சமாகும்.

The post குறைந்த நேரத்தில் அதிக வேகம் எடுக்கும் தொழில்நுட்பம்!: பயணிகளிடம் வரவேற்பை பெறும் அம்ரித் பாரத் ரயில் சேவை..!! appeared first on Dinakaran.

Tags : Amrit Bharat ,Bangalore ,Vande Bharat ,India ,Dinakaran ,
× RELATED ரயில் நிலையம் புனரமைப்பு