×

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு.. கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க சிஎம்டிஏ நிதி ஒதுக்கீடு

சென்னை : கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக உள்ள மேலும் ஒரு சுவரை அகற்ற அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே ஒரு இடத்தில் மதில் சுவர் அகற்றப்பட்ட நிலையில் மேலும் ஒரு சுவரை அகற்ற அமைச்சர் சேகர்பாபு ஆணையிட்டுள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, பேருந்து முனையத்தில் மேற்கொள்ள உள்ள பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணிகளுக்கு இடைஞ்சலாக உள்ள சுவரை இடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டார்.

ஏற்கனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மாநகரப் பேருந்துகள் இருக்கும் இடத்தில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் இருக்கும் இடத்திற்கு நடுவில் பயணிகளுக்கு தொந்தரவாக இருந்த சுவர் இடிக்கப்பட்டது. இந்த நிலையில், இடையூறாக உள்ள மேலும் ஒரு சுவரை அகற்ற அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூடுதல் பேட்டரி LIVE வாகனங்களை அதிகரிக்க சேகர்பாபு ஆணையிட்டுள்ளார்.

கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க சிஎம்டிஏ நிதி ஒதுக்கீடு

இதனிடையே கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க சிஎம்டிஏ சார்பில் முதற்கட்டமாக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒதுக்கீடு செய்த தொகை ரூ.20 கோடியை தெற்கு ரயில்வேக்கு சிஎம்டிஏ வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே புது ரயில் நிலையம் அமைகிறது. கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மாநில நிதியில் அமைய உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ரயில்நிலைய பணிகளை நிறைவு செய்ய ரயில்வேக்கு சிஎம்டிஏ கோரிக்கை வைத்துள்ளது. துறை ரீதியாக நிதி கிடைத்து ரயில் நிலையம் அமைக்க நீண்ட காலம் ஆகும் என்பதால் சிஎம்டிஏ நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ரயில் நிலைய பணிகளுக்கான செலவை கணக்கில் கொண்டு அடுத்தடுத்து நிதி ஒதுக்கப்படும் என்றும் சிஎம்டிஏ தெரிவித்துள்ளது.

The post கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு.. கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க சிஎம்டிஏ நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekharbabu ,Klambacham ,CHENNAI ,Klambakkam ,Shekhar Babu ,Klampakkam… ,Klampakkam ,CMDA ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்...