×

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி: இன்று முதல் டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்

புதுக்கோட்டை: ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெறும். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் சூடு பிடித்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 1-ம் தேதி அந்தோணியார் தேவாலய புத்தாண்டு விழாவை முன்னிட்டு நடைபெறுவது வழக்கம்.

ஆனால் ஒரு சில காரணங்களால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தாமதமானது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டை நடத்தும் பொருட்டு முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வாடிவாசல், பேரிகார்டு அமைப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகிற 6-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படவுள்ளது. இந்த நிலையில் போட்டியில் கலந்து கொள்ளும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு இன்று டோக்கன் வழங்கப்படுகிறது. இந்த டோக்கன்கள் ஆன்லைன் மூலம் வழங்கப்படவுள்ளன.

The post புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி: இன்று முதல் டோக்கன் வழங்கும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Jallikatu Competition ,Thachankurichi, Pudukkottai District ,Pudukkottai ,Tamil Nadu ,Jallikatu ,Tamils ,Pudukkottai Thachankurichi ,Pudukkottai district, ,Thachankurichi ,Nadu's First Jallikatu Competition ,District ,
× RELATED கேரள வாகனங்களுக்கு தமிழ்நாட்டில் வரி...