×

அரசு சேவைகள் மக்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் ‘மக்களுடன் முதல்வர்’ சிறப்பு திட்ட முகாம்

செங்கல்பட்டு, ஜன. 4: தமிழ்நாடு முதலமைச்சரால் அரசு சேவைகள் மக்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் ‘‘மக்களுடன் முதல்வர்” சிறப்புத்திட்ட முகாம் நேற்று தெடாங்கி நடந்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் மாநகராட்சியில் 10 முகாம்கள், 4 நகராட்சிகளில் தலா 1 முகாம் வீதம் மொத்தம் 4 முகாம்கள், 6 பேரூராட்சிகளில் தலா 1 முகாம் வீதம் மொத்தம் 6 முகாம்கள் மற்றும் நகரத்தினை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் மொத்தம் 22 முகாம்கள் என ஆக மொத்தம் 42 முகாம்கள் பின்வரும் நாட்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் விபரம் பின்வருமாறு: தாம்பரம் மாநகராட்சியின் நேற்று 2வது மண்டலத்துக்கு உட்பட்ட 9, 13, 14, 24, 26, 27, 28 ஆகிய வார்டுகளுக்கு குரோம்பேட்டை, ஜிஎஸ்டி சாலையில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்திலும், 4வது மண்டலத்துக்கு உட்பட்ட 32, 33, 49, 50, 51, 52, 53, 60 ஆகிய வார்டுகளுக்கு மேற்கு தாம்பரத்திலுள்ள அம்பேத்கார் திருமண மண்டபத்திலும் இந்த சிறப்பு முகாம் தொடங்கியது. மேலும், 1வது மண்டலத்துக்கு உட்பட்ட 5, 6, 7, 8, 10, 11, 12 ஆகிய வார்டுகளுக்கு பம்மல் எல்சி மஹாலில் 4.1.2024 (இன்று) தெடாங்குகிறது. 1வது மண்டலத்துக்கு உட்பட்ட 1, 2, 3, 4, 29, 30, 31 ஆகிய வார்டுகளுக்கு அனகாபுத்தூர் மன்னார்சாமி கோயில் தெருவில் அமைந்துள்ள ராஜேஷ்வரி திருமண மண்டபத்தில் நாளை நடைபெறவுள்ளன. அதோபேல், 5வது மண்டலத்துக்கு உட்பட்ட 65, 66, 67, 68, 69, 70 ஆகிய வார்டுகளுக்கு இந்திரா நகர் அகரம் மெயின்ரோடு பழநி திருமண மண்டபத்தில் 6ம் தேதி அன்றும், 3வது மண்டலத்துக்கு உட்பட்ட 39, 40, 41, 42, 34, 43, 44 ஆகிய வார்டுகளுக்கு வேளச்சேரி பிரதான சாலை, செம்பாக்கம் பகுதியில் உள்ள மாநகராட்சி சமுதாய நலக்கூடத்தில் 8ம் தேதி அன்றும் இந்த சிறப்பு முகாம் நடைபெற இருக்கின்றன.

பின்னர் 45, 46, 47, 48, 62, 63, 64 ஆகிய வார்டுகளுக்கு வேளச்சேரி பிரதான சாலை, சேலையூர் பகுதியில் உள்ள அபிராமி மஹாலில் 9ம் தேதிஅன்றும், 4வது மண்டலத்துக்கு உட்பட்ட 54, 55, 56, 57, 58, 59, 61 ஆகிய வார்டுகளுக்கு முடிச்சூர் ரோடு, பழைய பெருங்களத்தூர் பகுதியில் உள்ள பத்மாவதி கல்யாண மண்டபத்தில் 10ம் தேதி அன்றும் சிறப்பு முகாம் நடைபெறும். மேலும், 15 முதல் 21 வரையிலான வார்டுகளுக்கு கீழ்கட்டளை பெரிய தெருவில் உள்ள விஜயலட்சுமி கல்யாண மண்டபத்தில் 11ம் தேதி அன்றும், 3வது மண்டலத்துக்கு உட்பட்ட 22, 23, 25, 35, 36, 37, 38 ஆகிய வார்டுகளுக்கு குரோம்பேட்டை, ஆர்பி ரோடு, விநாயகா ராம் கணேஷ் மஹாலில் 12ம் தேதி அன்றும் சிறப்பு முகாம் நடைபெறும். மதுராந்தகம் நகராட்சியின் 24 வார்டுகளுக்கும் சேர்த்து அண்ணா திருமண மண்டபத்தில் தொடங்கியது. மறைமலைநகர் நகராட்சியின் 21 வார்டுகளுக்கும் சேர்த்து மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் 6.1.2024 அன்றும், நந்திவரம் கூடுவாஞ்சேரி 30 வார்டுகளுக்கும் சேர்த்து ஜிஎஸ்டி சாலையில் உள்ள என்பிஆர் திருமண மண்டபத்தில் 6.1.2024 அன்றும், செங்கல்பட்டு நகராட்சியில் 33 வார்டுகளுக்கும் சேர்த்து செங்கல்பட்டு நகராட்சி சமுதாய நலக்கூடத்தில் 6.1.2024 அன்றும், இந்த சிறப்பு முகாம் நடைபெறும்.

கருங்குழி பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கும் சேர்த்து ஜிஎஸ்டி சாலையில் உள்ள ஸ்ரீ சாரதா திருமண மண்டபத்தில் இன்றும், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கும் சேர்த்து எலப்பாக்கம் சாலையில் உள்ள அன்னை திருமண மண்டபத்தில் 5ம் தேதி அன்றும் நடக்க உள்ளது. இடைக்கழிநாடு பேரூராட்சியில் 21 வார்டுகளுக்கும் சேர்த்து ஈசிஆர் ரோட்டில் கடப்பாக்கத்திலுள்ள ஜிபி மஹால் திருமண மண்டபத்தில் 8ம் தேதி அன்றும், மாமல்லபுரம் 15 வார்டுகளுக்கும் சேர்த்து வடக்கு மாமல்லபுரத்திலுள்ள முத்தமிழ்மன்றம் திருமண மண்டபத்தில் 9.1.2024 அன்றும், திருப்போரூர் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கும் சேர்த்து கிழக்கு மாதா தெருவில் உள்ள சென்னை நாடார் முன்னேற்ற இளைஞர் கழக கல்யாண மண்டபத்தில் 10ம் தேதி அன்றும், திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கும் சேர்த்து திருக்கழுக்குன்றம் சமுதாய நலக்கூடத்தில் 11ம் தேதி அன்றும் சிறப்பு முகாம் நடைபெறுகின்றன.

நகரத்தினை ஒட்டிய கிராமமான வண்டலூர் கிராமத்தில் அமைந்துள்ள பவானி பேலஸ் மற்றும் நெடுங்குன்றம் கிராத்தில் அமைந்துள்ள ராணி மஹாலில் நேற்று தொடங்கியது. நாவலூர் கிராமத்தில் சமுதாய நலக்கூடம் மற்றும் கோவளம் கிராமத்தில் புரூனோ திருமண மண்டபத்தில் இன்றும், மதுரப்பாக்கம் கிராமத்தில் சமுதாய நலக்கூடத்தில் மற்றும் கானத்தூர் ரெட்டிகுப்பம் கிராமத்தில் ரோட்டரி மீனவர் சமுதாய நலக்கூடம் மற்றும் அகரம்தென் கிராமத்தில் திறந்தவெளி மைதானத்தில் 5ம் தேதிஅன்றும், பெரும்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 6ம் தேதி அன்றும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.சித்தாலப்பாக்கம் கிராமத்தில் சமுதாய நலக்கூடம் மற்றும் ஒட்டியம்பாக்கம் கிராமத்தில் சமுதாய நலக்கூடத்தில் 8.1.2024 அன்றும், மேடவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள வரலஷ்மி கல்யாண மண்டத்தில் மற்றும் முட்டுக்காடு கிராமத்தில் சமுதாய நலக்கூடத்தில் 9.1.2024 அன்றும் நடக்கிறது.

நன்மங்கலம் பஞ்சாயத்து அலுவலகத்திலும் மற்றும் கோவிலம்பாக்கம் ராணி மஹால் திருமண மண்டபத்தில் 10.1.2024 அன்றும், முடிச்சூர் கிராமத்தில் டாக்டர் அம்பேத்கார் திருமண மண்டபத்திலும், திரிசூலம் கிராமத்தில் அமைந்துள்ள சமுதாய நலக்கூடத்தில் 11.1.2024 அன்றும் நடைபெறுகிறது. கௌல்பஜார் கிராமத்தில் திறந்தவெளி மைதானம் மற்றும் தாழம்பூர் கிராமத்தில் அமைந்துள்ள சமுதாய நலக்கூடம் மற்றும் சிறுசேரி கிராமத்தில் அமைந்துள்ள சமுதாய நலக்கூடத்தில் 12.1.2024 அன்றும், படூர் கிராமத்தில் அமைந்துள்ள சமுதாய நலக்கூடம் மற்றும் திருவஞ்சேரி கிராமத்தில் பாரத் சட்டக்கல்லூரியிலும் மற்றும் வேங்கைவாசல் கிராமத்தில் அமைந்துள்ள ஏஜேஜி கல்யாண மண்டபத்தில் 13.1.2024 அன்றும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

The post அரசு சேவைகள் மக்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் ‘மக்களுடன் முதல்வர்’ சிறப்பு திட்ட முகாம் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Chief Minister ,Tamil ,Nadu ,Tambaram Corporation ,Chengalpattu district ,Minister ,Dinakaran ,
× RELATED மதுபோதை தகராறில் நண்பனை வெட்டி...