×

சாரை பாம்புக்கு நல்லடக்கம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு சொந்தமான 4 ஏக்கரில் நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளார். வயலில் இருந்த எலி அங்கு பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரை அதிகளவு சேதம் செய்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக அந்த வயல் அருகே 6 அடி நீளம் உள்ள சாரைபாம்பு ஒன்றை பார்த்துள்ளார். அவர் வயலுக்கு வரும் போதெல்லாம் அந்த பாம்பு அவரது வயலில் இருந்த எலிகளை பிடித்து தின்றுள்ளது. இதனால் அந்த பாம்பை அடிக்காமல் கண்ணன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் கண்ணன் வயலுக்கு வந்தபோது அந்த சாரை பாம்பு இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கண்ணன், பாம்பை நல்ல முறையில் அடக்கம் செய்ய முடிவு செய்தார். அதன்படி அந்த பாம்புக்கு மனிதர்களை போல் பாடைகட்டி பாம்பு மீது பன்னீர் தெளித்து, மஞ்சள் பொடி தூவி தாரை தப்பட்டையுடன் தூக்கி சென்று அருகில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்தார்.

The post சாரை பாம்புக்கு நல்லடக்கம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Kannan ,Tirunallur ,Orathanadu ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...