×

தமிழரின் பண்பை பறைசாற்றிய வேலு நாச்சியார், கட்டபொம்மன் வீரத்தை அனைவரும் அறிய வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: தமிழரின் பண்பைப் பறைசாற்றிய வேலுநாச்சியார், கட்டபொம்மன் வீரத்தை அனைவரும் அறிய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு: பதினெட்டாம் நூற்றாண்டிலேயே இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தென்னகத்தின் தியாக அத்தியாயங்களைத் தம் வீரத்தால் எழுதிய முன்னோடிகளான வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் பிறந்தநாள் (நேற்று) இன்று. வரி கட்ட மறுத்து, ஆங்கிலேயர்களின் படைப்பலத்தை எதிர்த்து, உயிரைவிடத் தன்மானமே பெரிதெனத் தமிழரின் பண்பைப் பறைசாற்றிய இவ்விருவரின் வீரத்தை இந்தியர் அனைவரும் அறிய வேண்டும். 1857 சிப்பாய்க் கலகத்துக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே விடுதலைப் போராட்ட விதைகளை ஊன்றிய மண் தமிழ்நாடு எனத் தம் நெஞ்சில் பதியவேண்டும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

The post தமிழரின் பண்பை பறைசாற்றிய வேலு நாச்சியார், கட்டபொம்மன் வீரத்தை அனைவரும் அறிய வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.

Tags : Velu Nachiyar ,Kattabomman ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,M. K. Stalin ,Velunachiar ,Tamil Nadu ,Veeramangai Velunachiyar ,Veerapandiya Kattabomman ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...