×

ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் தொடருவார்: ஜேஎம்எம் தலைவர் தகவல்

ராஞ்சி: ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் தொடருவார் என்று ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சியின் தலைவர் மிதிலேஷ் தாகூர் தெரிவித்தார். சட்டவிரோத சுரங்க அனுமதி, பணபரிமாற்ற வழக்குகள் தொடர்பாக ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை 6 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. ஈ.டி. முன்பு ஆஜராகும் பட்சத்தில் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்மன்களுக்கு பதில் அனுப்பும் காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதனிடையே, சோரன் பதவி விலக இருப்பதாக பாஜ கூறி வருகிறது.

இந்நிலையில், ஜேஎம்எம் தலைவர் மிதிலேஷ் தாகூர், ‘’சோரன் தலைமையில் நேற்று நடந்த ஆளும் கட்சி கூட்டணி கூட்டத்தில் சோரனுக்கு ஆதரவு அளிப்பதை கூட்டணிகள் உறுதிபடுத்தின. இதனைத் தொடர்ந்து சோரன் முதல்வராக நீடிப்பார். அவரது தலைமையில் மக்களவை மற்றும் மாநில தேர்தல்களில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது,’’ என்று தெரிவித்தார்.

The post ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் தொடருவார்: ஜேஎம்எம் தலைவர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Hemant Soran ,Jharkhand ,Chief Minister ,JMM ,President ,Ranchi ,Jharkhand Mukti Morsa Party ,Mithilesh Tagore ,Hemant Soren ,Enforcement Directorate ,Dinakaran ,
× RELATED ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் வழக்கு: நாளை ஒத்திவைப்பு