×

இந்தியாவுக்கு எதிராக குறைந்தபட்ச ஸ்கோர்…

* கேப் டவுன் டெஸ்ட் முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 55 ரன்னுக்கு சுருண்டது, இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோராக அமைந்தது. முன்னதாக, 2021ல் வாங்கடே மைதானத்தில் நடந்த டெஸ்டில் நியூசிலாந்து 62 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி இருந்தது.

* தென் ஆப்ரிக்க அணிக்கு இது 7வது குறைந்தபட்ச ஸ்கோராகும் (சொந்த மண்ணில் 5வது). கடந்த 91 ஆண்டுகளில் அந்த அணி எடுத்த மிகக் குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான். 1932ல் இங்கிலாந்துக்கு எதிராக அந்த அணி 45 ரன்னுக்கு சுருண்டிருந்தது.

* சிராஜ் 15 ரன்னுக்கு 6 விக்கெட் கைப்பற்றியது, டெஸ்ட் போட்டிகளில் முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன்பாக பதிவான 2வது சிறந்த பந்துவீச்சாக சாதனை படைத்தது. 2015ல் டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து வேகம் ஸ்டூவர்ட் பிராடு 15 ரன்னுக்கு 8 விக்கெட் கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார்.

* முதல் நாள் லஞ்ச்சுக்கு முன்பாக 5 விக்கெட் வீழ்த்திய 2வது இந்திய பவுலர் என்ற பெருமையும் சிராஜுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக, 1987ல் பெங்களூரில் பாகிஸ்தானுக்கு எதிராக மனிந்தர் சிங் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார்.

* முதல் இன்னிங்சில் முன்னிலை பெற இந்திய அணிக்கு 9.4 ஓவரே தேவைப்பட்டது. 2001ல் இருந்து நடந்த டெஸ்ட் போட்டிகளில் இதுவே குறைந்தபட்சமாகும். 2005ல் ஜிம்பாப்வேக்கு எதிராக தென் ஆப்ரிக்கா 11.2 ஓவரிலும், 2013ல் நியூசி.க்கு எதிராகவும் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது. இந்த 3 இன்னிங்சுமே நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்தவை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்திய அணி முதல் இன்னிங்சில் நேற்று 11 பந்தில் ஒரு ரன் கூட எடுக்காமல் கடைசி 6 விக்கெட்டை பறிகொடுத்தது (W 0 W 0 W 0 0 W 0 W W).

The post இந்தியாவுக்கு எதிராக குறைந்தபட்ச ஸ்கோர்… appeared first on Dinakaran.

Tags : India… ,South Africa ,Cape Town ,India ,New Zealand ,Whangade Stadium ,Dinakaran ,
× RELATED உலக கோப்பைக்கு தயாராவதில் தடுமாறும்...