×

மூத்த ஹமாஸ் தலைவர் பலி இஸ்ரேலில் போர் பதற்றம்

பெய்ரூட்: லெபனானில் நடந்த தாக்குதலில் மூத்த ஹமாஸ் தலைவர் பலியானதை அடுத்து தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேல் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தது. இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பு தொடர்ந்து ஒருவர் மீது ஒருவர் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர். லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேல் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் மூத்த ஹமாஸ் தலைவர் சலே அரோரி கொல்லப்பட்டனர். சலே அரோரி கொல்லப்பட்டதை ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா உறுதிப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

The post மூத்த ஹமாஸ் தலைவர் பலி இஸ்ரேலில் போர் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Hamas ,BEIRUT ,Israel ,Lebanon ,army ,Hezbollah ,Beirut, Lebanon ,Dinakaran ,
× RELATED அமெரிக்க டிரோனை ஹவுதி படையினர் சுட்டு வீழ்த்தினர்