×

23 ஆண்டுகளில் நடந்ததில்லை நீதிபதிகள் முன்பு இப்படியா குரலை உயர்த்தி பேசுவது?: வழக்கறிஞருக்கு தலைமை நீதிபதி குட்டு

புதுடெல்லி: தனது 23 ஆண்டு கால நீதிமன்ற பணியில் நீதிபதிகள் முன்பு இப்படி குரலை உயர்த்தி பேசி பார்த்ததில்லை. குரலை உயர்த்தி அச்சுறுத்தினால் நீதிமன்றம் அடிபணியும் என்று நினைப்பது தவறு என்று தலைமை நீதிபதி டிஒய். சந்திரசூட் வழக்கறிஞரைக் கண்டித்தார். உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கலின் போது வழக்கறிஞர் ஒருவர் தலைமை நீதிபதி டிஒய். சந்திரசூட் முன்னிலையில் குரலை உயர்த்தி கண்டிப்புடன் பேசினார். இதனை பார்த்த தலைமை நீதிபதி, ‘’எந்த வழக்குகளுக்காக நீங்கள் ஆஜராகிறீர்கள்? இது போன்று தான் நீதிபதிகள் முன்பு கத்துவதா? உங்களது குரலை தாழ்த்தி கொள்ளுங்கள். குரலை உயர்த்துவதன் மூலம் நீதிமன்றத்தை அச்சுறுத்தவோ, எச்சரிக்கவோ முடியும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.

என்னுடைய 23 ஆண்டு கால பணி காலத்தில் இது போன்று நடந்ததில்லை. இந்த கடைசி ஓராண்டு பணியின் போதும் இவ்வாறு நடக்க விட மாட்டேன். நீதிமன்றத்தின் மாண்பை கடைபிடிக்க வேண்டும்,’’ என்று கண்டித்தார். அதன் பிறகு, அந்த வழக்கறிஞர் மன்னிப்பு கேட்டார். இதற்கு முன்பு, வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் செல்போன் பயன்படுத்திய போது அதனை பறிமுதல் செய்யவும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கான இடம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்கில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங்கிடம், நீதிமன்றத்தை விட்டு வெளியேறுங்கள். நீதிபதிகளை நீங்கள் அச்சுறுத்த முடியாது என்று தலைமை நீதிபதி கண்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

The post 23 ஆண்டுகளில் நடந்ததில்லை நீதிபதிகள் முன்பு இப்படியா குரலை உயர்த்தி பேசுவது?: வழக்கறிஞருக்கு தலைமை நீதிபதி குட்டு appeared first on Dinakaran.

Tags : Chief Justice ,Guttu ,NEW DELHI ,TY ,Chandrachud ,Dinakaran ,
× RELATED உச்ச நீதிமன்ற வழக்கு விவரம் வாட்ஸ்அப்...