×

ரயில் நிலையங்களில் பிரதமர் மோடி செல்ஃபி பூத்: ரயில்வே PRO பணியிட மாற்றம்

டெல்லி: ரயில் நிலையங்களில் உள்ள பிரதமர் மோடியின் செல்ஃபி பூத்களுக்கு செலவிடப்பட்ட விவரங்கள் குறித்த RTI கேள்விக்கு பதிலளித்த மத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியான சிவ்ராஜ் மனஸ்புரேவை பணியிட மாற்றம் செய்துள்ளனர். 2023ம் ஆண்டுக்கான ரயில்வேயில் வழங்கப்படும் உயரிய விருதான ‘Ati Vishisht Rail Seva Puraskar’ விருதினை இவர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் பிரதமர் மோடியின் ‘செல்ஃபி பூத்’கள் மிகப்பெரும் செலவில் அமைக்கப்பட்டிருக்கின்றன. பிரதமர் மோடியின் பலவிதமான உருவங்களுடன் கூடிய அந்த செல்ஃபி பூத்களை ஏற்படுத்துவதற்கு பல மாதங்களாக ரயில்வே அதிகாரிகள் கடுமையாக வேலை செய்திருக்கிறார்கள்.

மோடி செல்ஃபி பூத்கள் அமைப்பதற்கு ரூ.6.25 கோடி செலவு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. ஒவ்வொரு செல்ஃபி பூத்துக்கும் ரூ.1.25 லட்சம் செலவிடப்பட்டிருக்கிறது. இந்த விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய ரயில்வேயிடமிருந்து பெறப்பட்டிருக்கின்றன. மும்பை, புசாவல், நாக்பூர், புனே, சோலாப்பூர் உள்ளிட்ட டிவிஷன்களில் 50 ரயில் நிலையங்களில் மோடி செல்ஃபி பூத்களை மத்திய ரயில்வே அமைத்திருக்கிறது. மேலும், 50 ரயில் நிலையங்களில் தற்காலிகமாக மோடி செல்ஃபி பூத்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய ரயில்வே மேற்கொண்டுவருகிறது

ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரியான அஜய் போஸ் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மோடி செல்ஃபி பூத் குறித்து தகவல்கள் கேட்டதற்கு மத்திய ரயில்வே மட்டும் தகவல்களை அளித்திருக்கிறது. தெற்கு ரயில்வே, வடக்கு ரயில்வே, மேற்கு ரயில்வே ஆகியவற்றின் நிர்வாகங்கள், மோடி செல்ஃபி பூத் தொடர்பான செலவின விவரங்களை அளிக்கவில்லை என்று அஜய் போஸ் தெரிவித்திருக்கிறார்.

50 ரயில் நிலையிங்களில் பிரதமர் மோடியின் செல்பி பூத்களுக்கு செலவிடப்பட்ட விவரங்களை RTI மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு தற்காலிக பூத் அமைக்க ரூ.1.25 லட்சமும், நிரந்திர பூத் அமைக்க ரூ.6.25 லட்சமும் செலவிடப்பட்டதாக தகவல் அளித்திருந்தார். இந்த செலவினங்கள் குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் இதுகுறித்த தகவல்களை RTI மூலம் தகவல் அளித்த அதிகாரியை எங்கே இடமாறுதல் செய்யப்பட்டார் என்ற விபரம் குறிப்பிடாமல் பணியிட மாற்றம் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

The post ரயில் நிலையங்களில் பிரதமர் மோடி செல்ஃபி பூத்: ரயில்வே PRO பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Tags : PM ,Modi ,Delhi ,Central Railways ,chief public relations officer ,Sivraj Manzapure ,RTI ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு பிற்பகலில் விசாரணை..!!