×

அதானிக்கு எதிரான வழக்குகளுக்கு சிறப்பு விசாரணை குழு தேவையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: அதானிக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் சிறப்பு விசாரணை குழு தேவையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான கவுதம் அதானிக்கு சொந்தமான, அதானி குழும நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை முன்வைத்த குற்றச்சாட்டுகளை அடுத்து, ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, செபி-யின் விதிமுறைகள் குறித்தும், பங்குச்சந்தை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும், ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இக்குழு கடந்த ஆண்டு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா அமர்வு காலை 10.30 மணிக்கு தீர்ப்பளித்தது.

அதானி குழுமம் மீதான முறைகேடு புகார் தொடர்பாக விசர்நாய் நடத்த செபிக்கு அதிகாரம் உள்ளது. 3 மாதத்தில் செபி விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. அதானிக்கு எதிரான வழக்குகளை முடித்து வைத்து தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம் ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையில் சட்ட மிரட்டல்கள் உள்ளதா என ஆராய உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரைகள் அடைப்படையில் ஒன்றிய அரசும் செபியும் நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பித்துள்ளது.

நிபுணர் குழு அறிக்கையை ஆய்வு செய்து இந்திய முதலீட்டாளர்களின் நாளான உறுதிசெய்ய ஒன்றிய அரசு, செபிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கையில் சட்ட விதிமீறல் இருந்தால் அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பங்குசந்தையல் அந்திய முதலீடு தொடர்பான செபி விதிகளில் நீதிமன்றம் தலையிட அவசியமில்லை. ஒழுங்காற்று அமைப்புகளின் அதிகாரத்துக்குள் நீதிமன்றம் தலையிட முடியாது. அதானி வழக்கை செபியே தொடர்ந்தது விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. செபி நடத்தும் விசாரணையில் சந்தேகப்படுவதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

 

 

The post அதானிக்கு எதிரான வழக்குகளுக்கு சிறப்பு விசாரணை குழு தேவையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Adani ,Supreme Court ,Delhi ,Gautam Adani ,US Hindenburg ,Adani Group ,Dinakaran ,
× RELATED அதானி நிறுவன மோசடி குறித்த செபி...