×

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ கு.க. செல்வம் உடல்நலக்குறைவால் காலமானார்!

சென்னை; சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ கு.க. செல்வம் உடல்நலக்குறைவால் காலமானார். திமுக தலைமை நிலைய செயலாளரான கு.க.செல்வம் போரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

திமுகவின் தலைமை நிலைய செயலாளரும், 2016ம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் உறுப்பினராகவும் கு.க. செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 முதல் 2021 வரை திமுகவின் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கு.க. செல்வம் தீவிர உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து கு.க. செல்வம் இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

The post சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ கு.க. செல்வம் உடல்நலக்குறைவால் காலமானார்! appeared first on Dinakaran.

Tags : DMK ,Chennai Ayaar ,Lantum Constituency ,G.K. Selvam ,Chennai ,DMK Head Office ,K. K. Selvam ,Borur Hospital ,Chennai Thousand ,Constituency ,Former ,DMK MLA ,
× RELATED திமுக இளைஞர் அணிக்கு மாவட்ட வாரியாக...