×

நிலத்தை அபகரித்து நடுத்தெருவில் பெற்றோரை தவிக்கவிட்ட மகன்-கலெக்டரிடம் கண்ணீர் மல்க புகார்

சித்தூர் : சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் அனுப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பக்தவச்சலம் மற்றும் அவரது மனைவி ரங்கம்மா ஆகியோர் நேற்று கலெக்டர் முருகன் ஹரிநாராயணாவிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இளைய மகன் ரகு என்பவர் எங்களை அடித்து மிரட்டி 5 ஏக்கர் நிலத்தை அவரது பெயருக்கு மாற்றி கொண்டார். பின்னர், எங்கள் இருவரையும் வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டார். இதனால், நாங்கள் உண்ண உணவு இன்றி பெரும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை உடனடியாக மீட்டுத்தர வேண்டும்.நாங்கள் சிறு வயது முதல் கூலி வேலைகள் செய்து சம்பாதித்து 5 ஏக்கர் நிலத்தை வாங்கினோம். இந்த நிலத்தை 2 மகன்களுக்கு சரிசமமாக வழங்கினோம். ஆனால், எங்கள் இளைய மகன் ரகு என்பவர் எங்களை அடித்து உதைத்து விரட்டினார்.  அது மட்டுமின்றி உங்களுக்கு வீடும் இல்லை. நிலமும் இல்லை. நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள் என விரட்டி விட்டார். எங்களுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை இளையமகன் ரகுவிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்ற கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். …

The post நிலத்தை அபகரித்து நடுத்தெருவில் பெற்றோரை தவிக்கவிட்ட மகன்-கலெக்டரிடம் கண்ணீர் மல்க புகார் appeared first on Dinakaran.

Tags : Chittoor ,Bhaktavachalam ,Rangamma ,Malka ,
× RELATED சித்தூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும்...