×

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று முதல் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்கள்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர், டிச.3: பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பாக அன்றாடம் அரசுத்துறைகளை அணுகும்போது அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களுக்கு சேரும் வகையில் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் முதல்வரின் முகவரித்துறை மூலம் கடந்த மாதம் 18ம் தேதி முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. ‘மக்களுடன் முதல்வர்’ சிறப்பு முகாம்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட அந்தந்த பகுதிகளில் இன்று முதல் வரும் 23ம் தேதி வரை 13 நாட்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.

வருவாய்த்துறை, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிக்குட்பட்ட பெருநகரம், காவல்துறை, மின்சாரத்துறை, வீட்டு வசதி வாரியத்துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, சமூகநலத்துறை, ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, தொழிலாளர் நலவாரியம் (சமூகபாதுகாப்புத் திட்டம்) தாட்கோ, வேலைவாய்ப்புத்துறை, மாவட்ட தொழில் மையம், மற்றும் மகளிர் திட்டம் ஆகிய துறைகள் தொடர்புடைய கோரிக்கை மனுக்கள் பெறுவது தொடர்பாக இந்த முகாம் நடைபெற உள்ளது. எனவே சம்மந்தப்பட்டதுறை தொடர்புடைய தனிநபர் கோரிக்கை மனுக்களை முகாம் நடைபெறும் பகுதிகளில் பொதுமக்கள் அளித்து 30 தினங்களுக்குள் தீர்வு பெறலாம். இவ்வாறு கலெக்டர் த.பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

The post திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று முதல் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்கள்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Tiruvallur district ,Tiruvallur ,Minister ,Address Department ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...