×

உயர்கல்வி நிறுவனங்கள் அனுமதியின்றி எம்பிஏ படிப்புகளை நடத்தக்கூடாது ஏஐசிடிஇ அறிவுறுத்தல்

வேலூர், ஜன.3: அனுமதியின்றி எம்பிஏ படிப்புகளை நடத்தக்கூடாது என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், கல்வி நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளது. கல்லூரிகளில் மாணவர்களுக்காக நடத்தப்படும் மோடிவேஷன் எனும் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசுபவர்கள், 10 நாட்களில் குறுகிய கால எம்பிஏ படிப்பு, உடனடி வகுப்பை வழங்குவதாக கூறி மாணவர்களை ஏமாற்றி சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இத்தகைய உடனடி எம்பிஏ படிப்புகள் நாட்டின் இளைஞர்களை தவறாக வழிநடத்தும் முயற்சியாகும். உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, ஏஐசிடிஇ அனுமதியின்றி எந்த ஒரு உயர்கல்வி நிறுவனமும் எம்பிஏ உள்ளிட்ட மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை நடத்தக்கூடாது. எம்பிஏ என்பது 2 ஆண்டு முதுநிலை படிப்பாகும். இது வணிகம் மற்றும் மேலாண்மைக்கூறுகளை பல்வேறு கோணங்களில் அறிந்து நவீன திறன்களை தனிநபர் அறிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, எம்பிஏ படிப்பை 10 நாட்களில் முடிக்க முடியாது. மாணவர்கள் அத்தகைய தவறான, மோசடியான தகவல்களை நம்பி, அந்த படிப்புகளில் சேரவேண்டாம் என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உயர்கல்வி நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை ஏஐசிடிஇ வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் அது தெரிவித்துள்ளது.

The post உயர்கல்வி நிறுவனங்கள் அனுமதியின்றி எம்பிஏ படிப்புகளை நடத்தக்கூடாது ஏஐசிடிஇ அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : AICTE ,Vellore ,All India Council of Technology ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...