×

இரூர் கிராமத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகம் வழங்கல்

 

பாடாலூர்,ஜன.3: ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு அரசின் 3ம் பருவ பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு அரசின் 3ம் பருவ பாட புத்தகங்கள் நேற்று வழங்கப்பட்டது. அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

திறக்கப்பட்ட முதல் நாளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வரை பள்ளி மாணவர்களுக்கு 3ம் பருவ பாட புத்தகங்கள், பாடத்திற்கான குறிப்பேடுகள், சீருடை, எண்ணும் எழுத்தும் பயிற்சி ஏடுகள் ஆகியவை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியர் திலகவதி பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் ஆகியோர் உடனிருந்தனர். மும்முனை மின்சாரம் பகல் நேரத்தில் 6 மணி நேரமும், இரவு நேரத்தில் 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரையும் வழங்கப்படுகிறது.

இதுபோல் வழங்காமல், 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். பகல் நேரத்தில் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் நேரத்தில் போதிய அளவு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இரவு நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச செல்லும்போது பாம்பு போன்ற விஷ ஜந்துகளால் விவசாயிகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

The post இரூர் கிராமத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகம் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Padalur ,Panchayat Union Primary School ,Iroor ,Aladhur taluk ,Perambalur ,Aladhur taluka Irur village ,panchayat union primary ,Irur ,Dinakaran ,
× RELATED பலாப்பழ சின்னத்திற்கு வாக்களித்து...