×

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி

 

கோவை, ஜன.3: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெறும் என கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக வரும் 9ம் தேதி பள்ளி அளவிலும், 10ம் தேதி கல்லூரி அளவிலும் மாணவ மாணவியர்களுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் கோவை நகர்மண்டபம், அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியில் மாலை 10 மணி நடத்தப்படவுள்ளன.

இந்தப் பேச்சுப் போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் பள்ளி (11 மற்றும் 12ம் வகுப்பு) மாணவ மாணவிகள் முதன்மை கல்வி அலுவலகத்தின் வாயிலாக தாங்கள் பயிலும் பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்தும், கல்லூரி மாணவ மாணவியர்கள் கல்லூரிக் கல்வி இணை இயகுநர் வாயிலாக தாங்கள் பயிலும் கல்லூரி முதல்வரிடம் கட்டாயம் பரிந்துரைக் கடிதம் பெற்று வர வேண்டும்.

ஒரு பள்ளி மற்றும் கல்லூரியிலிருந்து மொத்தம் 3 மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இந்த மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்பெற உள்ளன. இந்த பரிசுத்தொகைகள் மற்றொரு நாளில் மாவட்ட கலெக்டர் மூலம் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,District ,Collector ,Krantikumar Badi ,Tamil Nadu Government Tamil Development Department ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...