×

இலவச எலும்பு சிகிச்சை முகாம்

அரவக்குறிச்சி. ஜன,3: இலவச எலும்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது. பொதுநல அமைப்புகள் சார்ர்பில் இலவச எலுமும் சிகிச்சை முகாம் அரவக்குறிச்சி அடுத்த பள்ளபட்டியில் நடந்தது. இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, நாடித்துடிப்பு, உயரம் எலும்பின் நிலை, உறுதி ஆகியவவை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கேர் நகர் பள்ளி இமாம், அப்துல் ஹமீத துவாவுடன், கரூர் மாவட்ட முன்னாள் மருந்து வணிகர் சங்க தலைவர் பாப்புலர் அபுத்தாஹிர் முகாமை துவங்கி வைத்தார். பள்ளப்பட்டி நகர திமுக பொறுப்பாளர் வசிம் ராஜா இலவச மருந்துகள் வழங்கினார். தமுமுக மாவட்ட தலைவரும் வார்டு கவுன்சிலர் சாகுல்அமீது இலவச பரிசோதனைகள் முகாமை துவங்கி வைத்தார். பொதுநல அமைப்பு அன்வர், கொளக்குடி ஜாகீர், குருணை ஹபிபுல்லா, புலவர் நிஜாம் உள்ளிட்டோர் இந்த மருத்துவ மரு காமை ஒருங்கிணைத்தது ஏற்பாடு செய்திருந்தனர். 108 பேர் இந்த முகாமில் இலவச சிகிக்கை பெற்றனர். எலும்பு நிபுணர் டாக்டர் ரஜினிகாந்த் தலைமையில் மருத்துவக் குழுவினர் சிகிச்சையளித்தனர்.

The post இலவச எலும்பு சிகிச்சை முகாம் appeared first on Dinakaran.

Tags : Aravakurichi ,Elumum ,Pallapatti ,Dinakaran ,
× RELATED கரூர் அருகே அரவக்குறிச்சி...