×

இலங்கை போர் குற்றங்கள் பற்றி விசாரிக்க ஆணைக்குழு அமைப்பு: இலங்கை அரசு ஒப்புதல்

கொழும்பு: இலங்கையில் நடந்த போரின்போது ஏராளமான உயிர் மற்றும் பொருள் சேதங்கள் ஏற்பட்டன. இந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களும், அங்குள்ள அரசியல் கட்சியினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் போர் குற்றங்கள் பற்றி விசாரிக்க, மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்க இலங்கை அரசு முன்வந்துள்ளது. இதுகுறித்து இலங்கை வௌிவிவகார அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “இலங்கை போரின்போது ஏற்பட்ட உயிர், பொருள் சேதங்கள், நடந்த மனித உரிமை மீறல்கள், உரிமை மீறல்கள் தொடர்பான புகார்கள், அறிக்கைகள் பற்றி உண்மை, நல்லிணக்க ஆணைக்குழு விசாரித்து பரிந்துரைகளை வழங்கும்” என்று தெரிவித்துள்ளது.

The post இலங்கை போர் குற்றங்கள் பற்றி விசாரிக்க ஆணைக்குழு அமைப்பு: இலங்கை அரசு ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Commission to investigate ,Sri Lankan government ,Colombo ,Sri Lanka ,to ,Dinakaran ,
× RELATED யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் தண்டனை...