×

எம்பி தேர்தலில் இ.வி.எம்மில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளை 100% எண்ண கோரி பொதுநல வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், நாடு முழுவதும் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் சரிபார்ப்பு இயந்திரங்களை இணைத்து, பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகளை நூறு சதவீதம் எண்ண உத்தரவிடக் கோரி பாக்கியராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் 541 தொகுதிகளில் 216 தொகுதிகளில் இயந்திரங்களில் பதிவான வாக்குகளை விட அதிக வாக்குகள் எண்ணப்பட்டன.

126 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை விட முடிவுகளில் குறைந்த வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த குறைபாடுகள் காரணமாக எதிர்வரும் மக்களவை தேர்தலில் 100 சதவீதம் ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும் என எதிர்பார்த்த நிலையில் தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுகிறது. தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்ய ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணுமாறு உத்தரவிட கோரப்பட்டிருந்த்து.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, இதே கோரிக்கை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.விவரங்களை சமர்ப்பிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், 19ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post எம்பி தேர்தலில் இ.வி.எம்மில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளை 100% எண்ண கோரி பொதுநல வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : ICourt ,CHENNAI ,Lok Sabha ,Pakyaraj ,Dinakaran ,
× RELATED வாக்கு சேகரிப்பு கண்காணிப்பு பணி: ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் ஆணை