×

ஊட்டி தாவரவியல் பூங்காவில் ‘டாம் அன் ஜெர்ரி’ மலர்களால் வடிவமைப்பு: சுற்றுலா பயணிகள் வியப்பு

ஊட்டி: சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் ‘டாம் அன் ஜெர்ரி’ பொம்மைகள் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. இது, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகின்றனர். பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் எப்போதும் பூங்காவில் மலர்கள் பூத்துக் குலுங்கும் வகையில் பூங்கா முழுவதிலும் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் தற்போது முதல் சீசனுக்காக பூங்காவை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், பூங்காவில் மலர்கள் இன்றி காட்சியளிக்கிறது.

இந்நிலையில், பள்ளி அரையாண்டு விடுமுறை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் கடந்த 10 நாட்களாக ஊட்டிக்கு வந்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டும், 2024ம் ஆண்டை வரவேற்கும் வகையில் பூங்கா குளம் அருகே ‘டாம் அன் ஜெர்ரி’ பொம்மைகள் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. அதன் அருகே சுற்றுலா பயணிகள் நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

 

The post ஊட்டி தாவரவியல் பூங்காவில் ‘டாம் அன் ஜெர்ரி’ மலர்களால் வடிவமைப்பு: சுற்றுலா பயணிகள் வியப்பு appeared first on Dinakaran.

Tags : Tom ,AN JERRY ,BOTANICAL PARK ,Nilgiri district ,Ooty ,an ,Jerry ,Noodie Botanic Gardens ,
× RELATED பராமரிப்பு பணி முடிந்து தாவரவியல்...