×

ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டத்துக்கு எதிராக வட மாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் போராட்டம்: வடமாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுபாடு

டெல்லி: ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டத்துக்கு எதிராக வட மாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாரத நியாய சன்ஹிதா என்ற புதிய குற்றவியல் சட்டத்தில் விபத்து தொடர்பான விதிமுறைக்கு ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விபத்தால் மரணம் ஏற்பட்டால் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதிக்க புதிய சட்டத்தில் வழிவகை செய்யபட்டுள்ளது.

ஒன்றிய அரசின் புதிய சட்டத்தால் லாரி ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என எதிர்ப்புகள் எழுந்துள்ளது. மராட்டியம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறும் போாரட்டத்தால் சரக்குப் போக்குவரத்து முடங்கியுள்ளது. 3 நாட்களாக சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்ட நிலையில் இன்றுமுதல் பெட்ரோல், டீசல் டேங்கர் லாரிகளும் நிறுத்தபட்டது.

டேங்கர் லாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பெட்ரோல், டீசலுக்கு வடமாநிலங்களில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தால் வடமாநில பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. டேங்கர் லாரிகளும் நிறுத்தப்பட்டதால் நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழக ஓட்டுநர்கள் பாதிப்பு
வடமாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தால் மத்தியப் பிரதேசத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள் சிக்கி தவிக்கின்றனர். சாஹர் அருகே 50 கி.மீ. தூரத்தில் காடுகள் சூழ்ந்த இடத்தில் சிக்கித் தவிப்பதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓட்டுநர் தகவல் தெரிவித்தனர். ம.பி. மட்டுமின்றி மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களிலும் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தால் சரக்கு போக்குவரத்து முடக்ககியது. சரக்கு போக்குவரத்து முடங்கியதால் தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஒட்டுநர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். தினசரி சுமார் 50,000 லாரிகள் வடமாநிலங்களுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்கின்றன.

தமிழ்நாட்டுக்கு பாதிப்பில்லை
வடமாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தால் தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வராது. தமிழ்நாட்டுக்கு சென்னையில் இருந்தே பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்படுவதால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் லாரி ஓட்டுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யபட்டுள்ளது. அகில இந்திய மோட்டார் காங். நிர்வாகிகளுடன் ஒன்றிய உள்துறை சௌலாளர் அஜய்குமார் பல்லா பேச்சுவார்த்தை நடத்துகிறார்

The post ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டத்துக்கு எதிராக வட மாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் போராட்டம்: வடமாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுபாடு appeared first on Dinakaran.

Tags : northern states ,EU ,northern ,DELHI ,UNION STATE ,India ,Dinakaran ,
× RELATED பரமத்திவேலூரில் போலீஸ் அதிரடி...