×

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது தென்கொரியாவின் எதிர்கட்சி தலைவருக்கு கத்திகுத்து

சியோல்: தென் கொரியாவின் எதிர்க்கட்சியின் தலைவரான லீ ஜே-மியுங் மீது பாய்ந்த மர்ம நபர், அவரது கழுத்தில் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்கொரியா நாட்டின் பிரதான எதிர்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைவர் லீ ஜே-மியுங் (59), தெற்கு துறைமுக நகரமான பூசானுக்குச் சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அடையாளம் தெரியாத நபர் ஒருவர் லீ ஜே-மியுங்கை நோக்கி பாய்ந்தார்.

பின்னர் அவரது கையில் வைத்திருந்த கூர்மையான கத்தியால் லீ ஜே-மியுங்கின் கழுத்தில் குத்தினார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அந்த மர்ம நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த காட்சிகள் யாவும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன. எதற்காக எதிர்கட்சி தலைவரை மர்ம நபர் தாக்கினார் என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகிறது. கழுத்தில் இருந்து ரத்தம் கசிந்த நிலையில், கூட்டத்தில் இருந்து மீட்கப்பட்ட லீ ஜே-மியுங் அப்பகுதியில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தென் கொரியாவின் எதிர்கட்சி தலைவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது தென்கொரியாவின் எதிர்கட்சி தலைவருக்கு கத்திகுத்து appeared first on Dinakaran.

Tags : SEOUL ,South Korea ,Lee Jae-myung ,Democratic Party ,
× RELATED வடகொரியா போருக்கு தயாராகி வருகிறது:...