×

வேலை தேடி திருப்பூர் வந்த உ.பி. சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்: 2 தொழிலாளர்கள் போக்சோவில் கைது

காங்கயம்: காங்கயம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 வடமாநில தொழிலாளர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர். உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர், வீட்டில் யாரிடமும் சொல்லாமல் நேற்று முன்தினம் திருப்பூருக்கு வேலை தேடி வந்துள்ளார். திருப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கிய சிறுமி எங்கு செல்வது என தெரியாமல், நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் நிதிஷ்குமார் (23), ரூபேஷ்குமார் (21) ஆகியோர் சிறுமியிடம் பேச்சு கொடுத்து விவரத்தை கேட்டறிந்தனர். பின்னர் சிறுமியிடம், ‘‘நாங்கள் உனக்கு வேலை வாங்கி தருகிறோம்’’ எனக்கூறி சிவன்மலை மருதுரையான் வலசு பகுதியில் அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து அன்று இரவு நித்திஷ்குமார், ரூபேஷ்குமார் ஆகியோர் கேக் வாங்கி வந்து சிறுமியிடம் புத்தாண்டை கொண்டாட கூறியுள்ளனர். கேக் வெட்டிய பின் 2 பேரும் மது பாட்டிலை எடுத்து சிறுமியிடம் குடிக்க கூறியுள்ளனர். ஆனால், சிறுமி வேண்டாம் என கூறியுள்ளார். இதையடுத்து குளிர்பானத்தை மட்டும் குடி எனக்கூறி சிறுமியிடம் கொடுத்துள்ளனர். அதை குடித்த சிறிது நேரத்தில் சிறுமி மயக்கம் அடைந்துள்ளார். இதைப்பயன்படுத்தி நிதீஷ்குமாரும், ரூபேஷ்குமாரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மயக்கம் தெளிந்து சிறுமி சத்தம் போடவே வீட்டின் உரிமையாளர் ஓடி வந்துள்ளார். இதைப்பார்த்த இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதுகுறித்து காங்கயம் போலீசில் சிறுமி அளித்த புகாரின்பேரில், காங்கயம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நிதீஷ்குமார், ரூபேஷ்குமார் ஆகிய 2 பேரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post வேலை தேடி திருப்பூர் வந்த உ.பி. சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்: 2 தொழிலாளர்கள் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : UP ,Tirupur ,POCSO ,Kangyam ,North ,Poxo ,Uttar Pradesh ,
× RELATED ஆன்லைன் விளையாட்டில் ரூ7 லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை