×

பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பது தொடர்பாக ஜன.8ம் தேதி பொதுமக்கள் பங்களிப்புக் கூட்டம்

சென்னை: பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் பங்களிப்புக் கூட்டம் 08.01.2024 அன்று பள்ளிக்கரணையில் நடைபெற உள்ளது.

சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் சுற்றுச்சூழல் பூங்கா (Eco Park) அமைப்பது தொடர்பான பொதுமக்கள் பங்களிப்புக் கூட்டம் 08.01.2024 (திங்கட்கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் சென்னை மாநகராட்சியின் சமுதாய நலக் கூடம், ஐ.ஐ.டி. காலனி, பள்ளிக்கரணை, சென்னை-600 100 என்ற இடத்தில் மேயர் , கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையர் அவர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்தி கொண்டு 08.01.2024 (திங்கட்கிழமை) அன்று நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

The post பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பது தொடர்பாக ஜன.8ம் தேதி பொதுமக்கள் பங்களிப்புக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Perungudi garbage ,CHENNAI ,Pallikarana ,Perungudi garbage dump ,Perungudi Garbage Dumping Complex ,Perungudi ,Mandal ,Chennai Municipal Corporation ,Park ,Dinakaran ,
× RELATED வழக்கறிஞர்களிடையே மோதல்: வழக்கை விசாரிக்க ஐகோர்ட் ஒப்புதல்