×

திண்டுக்கல்லில் பாலியல் வழக்கில் அமமுக பிரமுகரும் கல்லூரி தாளாளருமான ஜோதி முருகனுக்கு 7 ஆண்டு சிறை!

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பாலியல் வழக்கில் அமமுக பிரமுகரும் கல்லூரி தாளாளருமான ஜோதி முருகனுக்கு 7 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.முத்தனம்பட்டியில் தனியார் நர்சிங் கல்லூரியில் பயின்ற மாணவிகளுக்கு ஜோதி முருகன் பாலியல் தொல்லை என வழக்கு பதிவாகியுள்ளது.

திண்டுக்கல் அருகே முத்தனம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியின் தாளாளரராக ஜோதி முருகன் என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர் தனது கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கூறி கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியல், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து கல்லூரியின் தாளாளர் ஜோதி முருகன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இவருக்கு உடந்தையாக இருந்த கூறப்பட்ட விடுதி காப்பாளர் அர்ச்சனா கைது செய்யப்பட்டார். கல்லூரியின் தாளாளர் ஜோதி முருகன் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அமமுக சார்பில் திண்டுக்கல் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இது தொடாபான வழங்கில் ஜோதி முருகன் கைது செய்யப்பட்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் அமமுக பிரகமுகர் ஜோதி முருகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.75,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் விடுதி காப்பாளர் அர்ச்சனாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.25,000 அபராதமும் விதித்து திண்டுக்கல் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

The post திண்டுக்கல்லில் பாலியல் வழக்கில் அமமுக பிரமுகரும் கல்லூரி தாளாளருமான ஜோதி முருகனுக்கு 7 ஆண்டு சிறை! appeared first on Dinakaran.

Tags : Jyoti Murugan ,Dindigul ,Muthanampatty ,Muthanampatti ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...