×

யு.பி.ஐ. மூலம் ஒரே நேரத்தில் இனி ரூ.5 லட்சம் வரை அனுப்பலாம்: முதற்கட்டமாக கல்வி நிலையங்கள், மருத்துவமனைகளுக்கு அனுமதி!!

சென்னை: ஸ்மார்ட் போன்கள் மூலம் உடனடி பண பரிமாற்றத்தை செய்ய உதவும் யு.பி.ஐ. பரிவர்த்தனையில் ரூ.5 லட்சம் வரை அனுப்புவதற்கான புதிய விதிகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. உடனடி பணப்பரிமாற்றம் செய்வதில் யு.பி.ஐ. முறை முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக முதற்கட்டமாக கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் கூகுள் பே, போன் பே மற்றும் பே.டி.எம். ஆகியவற்றில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை அனுப்பவும், பெறவும் முடியும்.

இதற்கு முன்பு இந்த தொகை ஒரு லட்ச ரூபாயாக இருந்தது. அத்துடன் ஆன்லைன் வாலட்டுகள் போன்ற ப்ரீபெய்டு பேமெண்ட் கருவிகளை பயன்படுத்தி சில வணிகர்கள் செய்யும் வணிக ரீதியிலான ரூ.2,000க்கும் அதிகமான பரிவர்த்தனைகளுக்கு 1.1% பரிமாற்ற கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆன்லைன் பேமெண்ட் மோசடிகளை தடுக்க ரூ.2,000க்கும் அதிகமாக செய்யப்படும் முதல் பரிவார்த்தைக்கும் 4 மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

The post யு.பி.ஐ. மூலம் ஒரே நேரத்தில் இனி ரூ.5 லட்சம் வரை அனுப்பலாம்: முதற்கட்டமாக கல்வி நிலையங்கள், மருத்துவமனைகளுக்கு அனுமதி!! appeared first on Dinakaran.

Tags : U. B. I. ,Chennai ,U.N. ,U. S. ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...