×

கடந்த 2 நாட்களில் குமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை 15,500 பேர் கண்டு ரசித்தனர்: பூம்புகார் நிர்வாகம் தகவல்

குமரி: கடந்த 2 நாட்களில் குமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை 15,500 பேர் கண்டு ரசித்துள்ளனர். விவேகானந்தர் மண்டபத்தை சுற்றுலா படகில் சவாரி செய்து 15,500 சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர் என்று பூம்புகார் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என தொடர் விடுமுறை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் இந்தியாவின் முக்கிய சுற்றுலா தலமாக கன்னியாகுமரி விளங்குகிறது.

கன்னியாகுமரியில் அதிகாலை சூரிய உதயத்தை காணவும், திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம் ஆகியவற்றை காணவும் தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக கன்னியாகுமரி கடற்கரை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என தொடர் விடுமுறை காரணமாக கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் மண்டபத்துக்கும் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கடந்த 2 நாட்களில் குமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை 15,500 பேர் கண்டு ரசித்துள்ளனர் எனவும் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றுலா படகில் சவாரி செய்து 15,500 சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர் எனவும் பூம்புகார் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சபரிமலை சீசன் ஆரம்பித்துள்ளதால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கடந்த 2 நாட்களில் குமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை 15,500 பேர் கண்டு ரசித்தனர்: பூம்புகார் நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Vivekananda Mandapam ,Kumari Sea ,Bhoompukar Administration ,Kumari ,Bhoompur administration ,Bhoompur ,
× RELATED விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சேவை நிறுத்தம்!