×

பொங்கல் பரிசு பொருட்களுடன் வெல்லம் சேர்த்து அரசு வழங்க வேண்டும்.. தருமபுரியில் வெல்லம் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

தருமபுரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் வெல்லம் தயாரிப்பு கலைக்கட்டியுள்ளது. கடக்கத்தூர், சோகத்தூர், பாப்பரப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 100க்கும் அதிகமான உருண்டை வெள்ளம் தயாரிக்கும் ஆலைகள் இயங்கி வருகின்றனர். ஒவ்வொரு ஆலையிலும் பத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளம் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லம் சென்னை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஓசூர், சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

மேலும், அண்டை மாநிலங்களான கர்நாடகாவில் உள்ள மைசூர், மாண்டியா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும், ஆந்திராவிற்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லம் தயாரிக்கும் பணி கலைக்கட்டியுள்ளது. இதனால் பொங்கல் பரிசுகளுடன் வெல்லம் சேர்த்து அரசு வழங்க வேண்டும் என வெல்லம் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதைப்போல வெல்லம் கொள்முதல் வெளிமாநிலங்களில் இருந்து அல்லாமல் உள்ளூரிலேயே கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

The post பொங்கல் பரிசு பொருட்களுடன் வெல்லம் சேர்த்து அரசு வழங்க வேண்டும்.. தருமபுரியில் வெல்லம் உற்பத்தியாளர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Darumpuri ,Pongal Festival ,Dharmapuri district ,Kadakathur ,Sokathur ,Paparabati ,Dinakaran ,
× RELATED வனப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை...