×

முதல்வர் அழைப்பு தமிழ்நாட்டின் தொழிற்சூழலை காட்டும் மாநாட்டில் 7,8 தேதிகளில் இணைந்திடுங்கள்

சென்னை: தமிழ்நாட்டின் துடிப்புமிகுந்த தொழிற்சூழலை வெளிக்காட்டும் பிரம்மாண்டமான மாநாட்டில் வரும் ஜனவரி 7,8 தேதிகளில் இணைந்திடுங்கள் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:

உலக முதலீட்டாளர் மாநாடு – 2024 தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதுகுறித்த ஆர்வம் மென்மேலும் பெருகி வருகிறது. 2030ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் ஆவதற்கான செயல்திட்டத்தை உலக முதலீட்டாளர் மாநாட்டில் வெளியிடத் தமிழ்நாடு மும்முரமாகிறது. தமிழ்நாட்டின் துடிப்புமிகுந்த தொழிற்சூழலை வெளிக்காட்டும் பிரம்மாண்டமான மாநாட்டில் வரும் ஜனவரி 7, 8 தேதிகளில் இணைந்திடுங்கள். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

The post முதல்வர் அழைப்பு தமிழ்நாட்டின் தொழிற்சூழலை காட்டும் மாநாட்டில் 7,8 தேதிகளில் இணைந்திடுங்கள் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Chief Minister ,M.K.Stalin ,M.K.Stalin X ,World Investor Conference ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...