×

எண்ணூர் அமோனியா கசிவு தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் அறிக்கை பெற்று நடவடிக்கை: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி

சென்னை: எண்ணூர் அமோனியா கசிவு தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 10வது கட்ட சாகர் பரிக்ரமா பயணத்தை ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா நேற்று சென்னையில் தொடங்கி வைத்து, சென்னை துறைமுகத்தில் இருந்து கடலோர காவல் படையில் சுஜெய் கப்பலில் நெல்லூருக்கு பயணம் மேற்கொண்டார். இந்நிகழ்வில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார்.

தொடர்ந்து எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: இந்த யாத்திரையின் நோக்கம் முதன்முறையாக ஒன்றிய அமைச்சர் ஒருவர், மீனவர்களுடன் கலந்துரையாடி, ஆலோசனை நடத்தி, ஒன்றிய அரசின் திட்டங்களை எடுத்து சொல்வதே ஆகும். எண்ணூர் பகுதியில் ஏற்பட்ட அமோனியா கசிவு தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் தமிழக அரசிடம் அறிக்கை மூலம் தெரிந்த பிறகுதான் அது குறித்து முடிவு எடுக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொழிற்துறைகளை நிறுவவேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கை என்று கூறினார்.

The post எண்ணூர் அமோனியா கசிவு தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் அறிக்கை பெற்று நடவடிக்கை: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Ennore ,Union Minister of State L. Murugan ,Chennai ,Union Fisheries ,Minister ,Parshotham Rupala ,Sagar Parikrama ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்