×

விசிக சார்பில் நடைபெறும் மாநாடு இந்தியா கூட்டணியின் தேர்தல் அரசியலுக்கான தொடக்க நிகழ்வு: திருமாவளவன் நம்பிக்கை

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் சமூக வலைத்தள நேரலையில் பேசியதாவது: இந்தியா கூட்டணியின் ஒரு அங்கமாக விசிக உள்ளது. எனவே விசிக சார்பில் ஜனவரி 26ம் தேதி நடைபெறும் மாநாடு இந்தியா கூட்டணியின் தேர்தல் அரசியல்கான தொடக்க நிகழ்வாகவும் தேர்தல் பிரச்சாரதிற்கான ஒரு தொடக்க நிகழ்வாக இருக்கும். இது வரலாற்று முக்கியதுவம் வாய்தது. எனவே விசிக தோழர்கள் கூடுதலாக வாகனத்தை முன்பதிவு செய்து அதிக அளவில் மக்களை அழைத்து வர வேண்டும். மேலும் இந்த மாநாடுக்கான விளம்பரம், துண்டு பிரசுரம் வழங்குவது என அனைத்தையும் பணிகளையும் விரைவில் முடிக்க வேண்டும்.

மேலும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் புயலால் ஏற்பட்ட பதிப்பு, தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து ஒன்றிய அரசு தமிழக அரசு கேட்ட ரூ.21,000 கோடி வழங்க வேண்டும். அத்துடன் வரும் தேர்தலில் வாக்கு சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கையை வலியுறுத்தி வரும் 4ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் வெள்ள பாதிப்பு அடைந்த மாவட்டகளில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டாம் என்று முடிவு எடுத்து இருந்தோம்.

தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து வருவாய் மாவட்டகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நடத்த வேண்டும். மேலும் எந்த பகுதியில் எந்த ஏந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நடைபெறும் என்ற விவரம் சமூக வலைதளத்தில் உள்ளது. விசிக தோழர்கள் அதன் அடிப்படையில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும். சென்னை உள்ளிட்ட 4 மாவட்டத்தின் சார்பில் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

The post விசிக சார்பில் நடைபெறும் மாநாடு இந்தியா கூட்டணியின் தேர்தல் அரசியலுக்கான தொடக்க நிகழ்வு: திருமாவளவன் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Congress ,Vishik ,India Alliance ,Thirumavalavan Hope ,CHENNAI ,VISA ,President ,Thirumavalavan ,Visika ,
× RELATED தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்