×

யுனைட்டட் கோப்பை டென்னிஸ் காலிறுதியில் போலந்து: ஸ்வியாடெக் அசத்தல்

பெர்த்: யுனைட்டட் கோப்பை டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் அணியை வீழ்த்திய போலந்து காலிறுதிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியாவின் பெர்த் மற்றும் சிட்னி நகரங்களில் 18 நாடுகள் பங்கேற்கும் 2வது யுனைட்டட் கோப்பை டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியிலும் தலா 3 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். பெர்த்தில் நேற்று நடந்த ஏ பிரிவு ஆட்டத்தில் போலந்து-ஸ்பெயின் அணிகள் மோதின.

கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் போலந்தின் இகா ஸ்வியாடெக் – ஹோபர்ட் ஹர்காக்ஸ் இணை ஸ்பெயினின் டேவிடோவிச் ஃபோகினா – சாரா சோரிபெஸ் டோர்மோ இணையுடன் மோதியது. அதில் அதிரடியாக விளையாடிய போலந்து ஜோடி 6-0, 6-0 என நேர் செட்களில் மிக எளிதாக வென்று ஒரு புள்ளியை பெற்றது. ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்பெயினின் டேவிடோவிச் ஃபோகினா 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் போலந்தின் ஹோபர்ட் ஹர்காக்சை வீழ்த்தி பதிலடி கொடுத்தார்.

இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, கடைசியாக நடந்த மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-2, 6-1 என நேர் செட்களில் சாரா சோரிபெஸ் டோர்மோவை (ஸ்பெயின்) வீழ்த்தினார். போலந்து 2-1 என்ற கணக்கில் 2வது வெற்றியை பெற்றது. ஏற்கனவே பிரேசிலை 3-0 என வீழ்த்தியிருந்தது. ஏ பிரிவில் முதலிடம் பிடித்த போலந்து, முதல் அணியாக காலிறுதியை உறுதி செய்துள்ளது.

The post யுனைட்டட் கோப்பை டென்னிஸ் காலிறுதியில் போலந்து: ஸ்வியாடெக் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Poland ,United Cup ,Swiatek ,Perth ,Spain ,United Cup tennis ,Sydney, Australia ,Sviatek ,Dinakaran ,
× RELATED மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இகா முன்னேற்றம்