×

புதிய குற்றவியல் சட்டத்தை எதிர்த்து பொது நல மனு: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

புதுடெல்லி: இந்திய தண்டனை சட்டங்களுக்கு பதிலாக புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள குற்றவியல் சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய சட்டம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் மக்களவையில் கடந்த டிசம்பர் 21ம் தேதி நிறைவேற்றப்பட்டு, அவற்றிக்கு கடந்த டிசம்பர் 25ம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

இன்னும் ஓராண்டில் யூனியன் பிரதேசங்களில் இந்த சட்டம் முதற்கட்டமாக கொண்டு வரப்படுவதாக ஒன்றிய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வக்கீல் விஷால் திவாரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுதாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், ‘பெரும்பாலான எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இன்றி இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

எனவே இதன் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். இந்த சட்டம், போலீஸ் காவல் 15 நாட்களுக்கு பதிலாக 90 நாட்கள் வரை நீட்டிக்க வழிவகுக்கிறது. இது லாக்அப் சித்ரவதைகளுக்கு காரணமாக அமையும். இதுபோன்ற பல்வேறு கொடூரமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன’ என குறிப்பிட்டுள்ளார்.

The post புதிய குற்றவியல் சட்டத்தை எதிர்த்து பொது நல மனு: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Supreme Court ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...