×

தனியார் நிறுவனத்தில் முதலீடு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு சிபிஐ நோட்டீஸ்

பெங்களூரு: தனியார் நிறுவனத்தில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் முதலீடு செய்துள்ளது குறித்து சிபிஐ அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவரும் மாநில துணை முதல்வருமான டிகே சிவகுமார் அதிக சொத்து குவித்தார் என பாஜ ஆட்சியில் அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் பாஜ ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கை காங்கிரஸ் அரசு வாபஸ் பெற்றுள்ளது. கடந்த மாதம் நடந்த அமைச்சரவையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள், துணை முதல்வர் டிகே சிவகுமார் தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார் என அதற்கு விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கும் சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக துணை முதல்வர் டிகே சிவகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜ ஆட்சியில் என் மீது வழக்கு தொடரப்பட்டது. பாஜ ஆட்சியின் போது சிபிஐ விசாரணைக்கு அளிக்கப்பட்ட வழக்கில் அதிகாரிகள் முழு அளவில் விசாரணை நடத்தவில்லை. இந்நிலையில் மாநில அரசு வழக்கை வாபஸ் பெற்றுள்ளது.

மாநில அரசின் நடவடிக்கைக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. அதே நேரம் சிபிஐ அதிகாரிகளின் விசாரணைக்கு முழு அளவில் ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்த அனைத்து விவரமும் சிபிஐ அதிகாரிகளுக்கு நன்றாக தெரிகிறது. எனவே, சிபிஐ அதிகாரிகள் எவ்விதமான விசாரணை நடத்தினாலும் அதற்கு என்னுடைய ஒத்துழைப்பு உண்டு. அவர்கள் என்ன வேண்டும் என்றாலும் செய்து கொள்ளட்டும். அதைப்பற்றி எனக்கு எவ்வித ஆட்சேபனையும் கிடையாது. சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்கவும் தயாராகவே இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post தனியார் நிறுவனத்தில் முதலீடு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு சிபிஐ நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : CBI ,Karnataka ,Deputy Chief Minister ,TK Shivakumar ,Bengaluru ,DK Shivakumar ,Karnataka State Congress Party ,President ,State Deputy Chief Minister ,DK Sivakumar ,Dinakaran ,
× RELATED மாஜி துணை முதல்வர் ஜாமீன் கோரிய மனு...