×

காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்த காட்டு யானை

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை கோத்தகிரி சாலை வழியாக அருகில் உள்ள ஓடந்துறை ராமசாமி நகருக்கு வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து யானையை விரட்ட முயன்றனர்.

ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் யானை அங்குள்ள ஹாலோபிளாக் கல் கடைக்குள் புகுந்தது. வனத்துறையினர் தொடர்ந்து விரட்டினர். அதன்பின், யானை வனத்துக்குள் செல்ல முயன்றது. ஆனால், எதிரே பெரிய காம்பவுண்ட் சுவர் இருந்தது. அந்த காம்பவுண்ட் சுவற்றை காட்டுயானை ஏறி குதித்து வனத்துக்குள் சென்று மறைந்தது. இதனை பொதுமக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.

The post காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்த காட்டு யானை appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Mettupalayam forest ,Coimbatore district ,Odanthurai Ramasamy ,Kothagiri road ,Dinakaran ,
× RELATED வனத்தை பாழ்படுத்தும் 800 டன் சீமை கருவேல மரங்கள் வேரோடு அகற்றம்