×

அனைத்து பத்திரிகையாளர்களையும் நல வாரியத்தில் சேர்க்க பரிசீலனை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்

சத்தியமங்கலம்: அனைத்து பத்திரிகையாளர்களையும் நல வாரியத்தில் சேர்ப்பது குறித்து அதற்கான கமிட்டியில் பரிசீலனை செய்து முடிவு எடுக்கப்படும் என தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நேற்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் விருதுகள் வழங்குதல் மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் அனைத்து பத்திரிகையாளர்களையும் சேர்ப்பது குறித்து அதற்கான கமிட்டியில் பரிசீலனை செய்து முடிவு எடுக்கப்படும்,’என்று அவர் கூறினார்.

The post அனைத்து பத்திரிகையாளர்களையும் நல வாரியத்தில் சேர்க்க பரிசீலனை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,MU Saminathan ,Sathyamangalam ,Tamil Nadu ,Information ,M. P. Saminathan ,Welfare Board ,Tamil ,Development ,Information Minister ,M.B. Saminathan ,Erode district ,
× RELATED தாளவாடி அருகே மாங்காய்களை பறிக்க...