×

இட ஒதுக்கீடு கொள்கை வழிகாட்டுதல் 28ம் தேதிக்குள் கருத்துகளை பதிவு செய்யலாம்: கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவு

சென்னை: திருத்தி அமைக்கப்பட்ட இட ஒதுக்கீடு கொள்கையை யு.ஜி.சி. வடிவமைத்துள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் குறித்த கருத்துகளை, வரும் 28ம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என அனைத்து கல்வி நிறுவனங்களும் யு.ஜி.சி. தெர்வித்துள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலாளர் மானிஷ் ஜோஷி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பல்கலைக்கழக மானியக்குழு உயர்கல்வியில் தரமான கல்வியை வழங்குவதற்காகவும், தரத்தை பேணுவதற்காகவும் அவ்வப்போது வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது.

அந்த வகையில், உயர்கல்வித்துறையில் மாணவர் சேர்க்கை மற்றும் வேலை வாய்ப்புகள் தொடர்பாக இடஒதுக்கீடு கொள்கை அமல்படுத்தவதற்கான வழிகாட்டுதல்கள் கடந்த 2006ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டன. பல்கலைக்கழக மானியக்குழு, ‘சிறப்பு குழு’ ஒன்றை உருவாக்கி, நீதிமன்ற உத்தரவுகள் அடிப்படையில் திருத்தி அமைக்கப்பட்ட இட ஒதுக்கீடு கொள்கையை வடிவமைத்துள்ளது. இந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் குறித்த கருத்துகளை, அனைத்து கல்வி நிறுவனங்களும் யு.ஜி.சி.யின் https://uamp.ugc.ac.in என்ற வலைதளத்தில் வருகிற 28ம் தேதிக்குள் பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post இட ஒதுக்கீடு கொள்கை வழிகாட்டுதல் 28ம் தேதிக்குள் கருத்துகளை பதிவு செய்யலாம்: கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : UGC ,CHENNAI ,University Grants Commission ,Manish Joshi ,Dinakaran ,
× RELATED ராகிங்கை தடுக்காவிட்டால் நடவடிக்கை...