×

கொரோனா வைரஸ் உறுதியானதால் கேரள இளைஞர் ஆக்ராவில் தற்கொலை

ஆக்ரா: உத்தரபிரதேசத்தில் கோவிட் பாதிப்புக்குள்ளான கேரள வாலிபர் ஒருவர், மரபணு சோதனை முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே நீரில் மூழ்கி உயிரிழந்தார். உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் வந்திறங்கிய திருவனந்தபுரத்தை சேர்ந்த 32 வயது நபருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. அவரது ஆர்டி-பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது.

இது கோவிட் நோயின் உருமாறிய வைராசா என்பதை அறிய அவரது மாதிரி மரபணு வரிசை முறையை கண்டறிய, லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வரும் வரை, மருத்துவமனையில் காத்திருக்குமாறு அதிகாரிகள் அவரிடம் கூறினர். ஆனால் அவர் திடீரென மாயமானார். அவரைப் பற்றிய தகவல்கள் மையப்படுத்தப்பட்ட கோவிட் போர்ட்டலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்று தலைமை மருத்துவ அதிகாரி அருண்குமார் ஸ்ரீவஸ்தவா கூறினார். இந்நிலையில் திருவனந்தபுரத்தை சேர்ந்த அந்த வாலிபரின் உடல் ஆக்ரா நீரோடையில் கண்டெடுக்கப்பட்டது. அவரது சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கொரோனா வைரஸ் உறுதியானதால் கேரள இளைஞர் ஆக்ராவில் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Agra ,Uttar Pradesh ,Thiruvananthapuram ,Agra Containment Railway Station ,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...