×

கோயம்பேட்டிலிருந்து முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டண வித்தியாசம் நடத்துனர் மூலம் தரப்படும்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

சென்னை: பயணிகளுக்கு கட்டண வித்தியாசம் நடத்துனர் மூலம் தரப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன்னரே முன் பதிவு செய்த பயணிகளிடம் சென்னை கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கும் அதேபோன்று தென் மாவட்டங்களில் இருந்து சென்னை கோயம்பேட்டிற்கும் பயணம் செய்வதற்காக பெறப்பட்ட கட்டணத்தில் தற்போது கிளாம்பாக்கம் வரை மட்டுமே அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்படுவதால் கட்டண வித்தியாசத்தொகை நடத்துனர் மூலம் பயணம் தொடங்கும் போது திருப்பி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே அவர்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஏற்படும் கால தாமதத்தை தவிர்ப்பதற்காகவும், அதில் உள்ள சில நடைமுறை சிக்கல்களை தவிர்ப்பதற்காகவும் இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post கோயம்பேட்டிலிருந்து முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டண வித்தியாசம் நடத்துனர் மூலம் தரப்படும்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbet ,Minister ,Sivasankar ,Chennai ,Tamil Nadu ,Transport ,Sivashankar ,State Rapid Transport Corporation ,Dinakaran ,
× RELATED கோயம்பேட்டில் கத்தியை காட்டி போதை...