×

2024-ம் ஆண்டில் 12 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த திட்டம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி

ஸ்ரீஹரிகோட்டா: பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தபட்டது. பிஎஸ்எல்வி சி-58ல் இருந்து வெற்றிகரமாக பிரிந்த எக்ஸ்போசாட்டின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. 2024-ம் ஆண்டில் 12 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த திட்டமிடபட்டுள்ளதாகவும், ஆதித்யா எல்-1 ராக்கெட் திட்டமிட்டபடி ஜன.6ல் நிலைநிறுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அளித்த போட்டியில் கூறியதாவது:
எக்ஸ்போசாட் வெற்றிகரமாக விண்ணில் நிர்ணயிக்கப்பட்ட சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதன் மூலம் உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கருந்துளைகள், நியூட்ரான் பற்றி ஆராய பிரத்யேக செயற்கைக்கோளை கொண்ட 2-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

பி.எஸ்.எல்.வி- சி -58 ராக்கெட் பூமியிலிருந்து 650 கி.மீ புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டள்ள நிலையில், பிரபஞ்சம் பற்றிய தகவல்களை தரும் செயற்கைக்கோளாக இந்த ராக்கெட்டில் இடம் பெற்றுள்ளன. மாணவிகள் தயாரித்த ‘வெசாட்’ என்ற செயற்கைகோளும் விண்ணில் ஏவப்படவுள்ளது. அவர்களுக்கு வாழ்த்துக்கள். இது மிகவும் தனித்துவம் வாய்ந்த செயற்கைக்கோள் ஆகும்.

மேலும்,ககன்யான் திட்டம் மூலம் 2025-ம் ஆண்டு மனிதர்கள் விண்ணிற்கு அனுப்ப உள்ளோம். அதற்கு தேவையான செயல்பாடுகள் இந்த ஆண்டு தொடங்கபடவுள்ளது என தெரிவித்தார்.

The post 2024-ம் ஆண்டில் 12 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த திட்டம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி appeared first on Dinakaran.

Tags : ISRO ,president ,Somnath Sriharikota ,Somnath ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...