×

எய்ம்ஸ் மாஸ்டர் பிளான் இறுதி செய்யப்பட்டுள்ளது: ஆர்டிஐயில் தகவல்

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 27.1.2019ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தற்போது வரை சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. வேறு எந்தவிதமான கட்டுமானப் பணிகளும் துவங்கவில்லை. மருத்துவக் கல்லூரிக்கான எம்பிபிஎஸ் வகுப்பு மட்டும் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் இயங்கி வருகிறது.

இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் குறித்து வல்லரசு என்பவர் ஆர்டிஐயில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் சில கேள்விகளை கேட்டிருந்தார். அதற்கு அமைச்சகம் அளித்துள்ள பதிலில், ‘‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு முந்தைய பணிகள் அனைத்தும் முடிந்துள்ளன. இந்தியா மற்றும் ஜப்பான் அரசுடனான ஒப்பந்தப்படி 2026ம் ஆண்டு அக்டோபருக்குள் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முடிக்கப்பட வேண்டும்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு மொத்தமாக ₹1977.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கட்டுமான பணிக்கான திட்ட மேலாண் இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார். எய்ம்ஸ் கட்டுமானத்திற்கான மாஸ்டர் பிளான் இறுதி செய்யப்பட்டுள்ளது. 2021-22ம் ஆண்டிற்கான எம்பிபிஎஸ் வகுப்புகள் தற்காலிக இடத்தில் செயல்படுகிறது’’ என கூறப்பட்டுள்ளது.

The post எய்ம்ஸ் மாஸ்டர் பிளான் இறுதி செய்யப்பட்டுள்ளது: ஆர்டிஐயில் தகவல் appeared first on Dinakaran.

Tags : AIIMS ,Madurai ,Modi ,Madurai AIIMS Hospital ,MBBS ,Medical College ,Ramanathapuram Medical College.… ,RTI ,Dinakaran ,
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...