×

கூடுதல் அணு உலைகள் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

கும்பகோணம்: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் அணு உலைகளையும், அணுக்கழிவு மையத்தையும் மேலும் மேலும் உருவாக்கி வருவது கவலை அளிக்கிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை மீண்டும் ரஷ்யாவுக்கே கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இதனை ஒன்றிய அரசு கண்டுகொள்ளவே இல்லை.

தொடர்ந்து தமிழ்நாடு மக்களின் நலனுக்கு எதிராகவே ஒன்றிய அரசு செயல்பட்டு வருவது உறுதியாகிறது. ஒன்றிய பாஜ அரசின் நலனுக்காக தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் பலியாக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அண்மையில் தூத்துக்குடியில் பெய்த பெருமழை காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை உலகிற்கு எடுத்துக்காட்டி உள்ள நிலையில், புதிய உலைகளை அமைக்கும் முயற்சி சூழலியலுக்கு எதிரானது. கூடங்குளத்தில் புதிய அணு உலைகளையும், அணுக்கழிவு மையங்களையும் அமைக்கும் முடிவை அந்த பகுதி மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் கடுமையாக எதிர்ப்பார்கள். ஒன்றிய அரசின், தமிழர் விரோத போக்கை தமிழ்நாட்டின் முதலமைச்சர் கடுமையாக எதிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post கூடுதல் அணு உலைகள் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Jawahirullah ,Kumbakonam ,Humanity People's Party ,President ,MLA ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Narendra Modi ,Dinakaran ,
× RELATED பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்தி...