×

மயிலாடும்பாறை அருகே கரடி விஷம் வைத்து கொல்லப்பட்டதா? வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை

 

வருசநாடு, ஜன. 1: மயிலாடும்பாறை அருகே பொன்னன்படுகை சாலையோரம் அமைந்துள்ள தனியார் தோட்டம் மலைப்பகுதியில் சுமார் 8 வயது மதிக்கத்தக்க ஆண் கரடி மர்மமான முறையில் அழுகிய நிலையில் இறந்து கிடப்பதாக கண்டமனூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைடுத்து கண்டமனூர் வனச்சரகர் திருமுருகன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கரடியின் உடலை மீட்டனர். பின்னர் கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு கரடியின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

அதில் சந்தேகப்படும் படியான காயங்கள் இருப்பதாகவும் இதையடுத்து கரடியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதே பகுதியில் புதைக்கப்பட்டது. முதற்கட்டமாக வயது மூர்ப்பு அல்லது நோய்வாய்ப்பட்டு கரடி இறந்திருக்கலாமா? அல்லது விஷம் வைத்து கரடி கொல்லப்பட்டதா? என பல கோணங்களில் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே கரடி இறந்து போனது குறித்த உண்மையான தகவல் கிடைக்கும் என வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

The post மயிலாடும்பாறை அருகே கரடி விஷம் வைத்து கொல்லப்பட்டதா? வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Mayiladumparai ,Varusanadu ,Kandamanur forest department ,Ponnanpadugai road ,Mailadumparai ,Kandamanur ,
× RELATED கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு